வெண்மார்பு மீன் கொத்தி(White-throated Kingfisher) கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சென்றிருந்தபோது, தொடர்ச்சியாக காலையிலும் மாலையிலும் வெண்மார்பு மீன்கொத்தியின் குரலை கேட்க முடிந்தது. எங்கு வெளியில் சென்றாலும், மற்ற பறவைகளின் குரலை தாண்டி, இதன் குரல் கேட்டது. மின்சாரக் கம்பியில் அமர்ந்திருந்ததை பார்க்கவும் முடிந்தது. தலை மற்றும் அடிவயிறு பழுப்பு நிறம் . முதுகுப்பகுதி அழகிய நீலம். தொண்டை வெள்ளை. நீண்ட, அகலமான சிவப்பு அலகு மற்றும் கால்கள். பெண் பறவையின் பழுப்பு நிறம் சற்று மங்கி இருப்பதை … Continue reading தூவித்தோழர்கள்-39
ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பு – AWC 2025-26
Vishnupuram Birding Circle, AWC Report 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கி 2026 பிப்ரவரி வரை நீண்ட, ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பில் (Asian Waterbird Census) 'விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம்' குழுவினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டோம். இம்முறை இந்தியாவில் eBird செயலி மூலமாக, அதிகாரப்பூர்வமாக AWC நடத்தப்பட்டிருக்கிறது. மற்ற கணக்கெடுப்புகளைப் போலன்றி நீர்நிலைகளில் பறவைகளை அவதானித்து, AWC Project-ல் பட்டியலிட்டதும் மேலதிகமாக ஒரு Google படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. நீர்நிலைகளில் கண்ட பறவைகளைப் பற்றிய தகவல்கள் … Continue reading ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பு – AWC 2025-26
அதிகாலை சங்கீதம்
காலை நடை செல்லும் போது, டான் போஸ்கோ பள்ளியின் பின்புறம், பல பறவைகளை பார்த்திருக்கிறேன். Dawn Chorus நிகழ்ச்சிக்கு, அங்கு சென்று பறவைகளின் குரல்களை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்தேன். காலையில் நானும் தேவும் அங்கு சென்றோம். தெருவில் நுழைந்தவுடன் ஒரு கம்பத்தில் அமர்ந்திருந்த வல்லூறு எங்களை வரவேற்றது. அங்கிருந்து பறந்து ஒரு வேப்ப மரத்தில் சென்று அமர்ந்தது . சாலையின் ஓரத்தில் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். மைனா மற்றும் சின்னான்கள் இருந்தன. நீல … Continue reading அதிகாலை சங்கீதம்
தூவித்தோழர்கள்-38
மடையான்(Indian Pond-Heron) நீர் நிலைகளின் அருகே மடையான்களை பார்க்க முடியும். தலையிலும் மார்பிலும் பழுப்பு நிறக் கோடுகள். உடலின் மேற்புறம் பழுப்பு . மஞ்சள் நிற கருவிழி . இனப்பெருக்க காலத்தில் தலையும் உடலும் ஆரஞ்சு நிறத்திலும், முதுகு செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். தலையில் இருந்து நீண்ட மெல்லிய இறகுகளும் முளைக்கும்.மஞ்சள் நிற கூர்மையான அலகின் நுனி கருப்பு. மடையான் நீர்நிலைகளின் ஓரம் தன் கழுத்தை குறுக்கிக்கொண்டு காத்திருக்கும். மீனைப் பார்த்தவுடன் சட்டென்று கழுத்தை நீட்டி மீன் … Continue reading தூவித்தோழர்கள்-38
தூவித்தோழர்கள்-37
செவ்வலகு பூஞ்சிட்டு(Pale-Billed Flowerpecker) தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள தூங்குவாகை மரத்திற்கு செவ்வலகு பூஞ்சிட்டு வரும். மின்னல் போல மிக வேகமாக அங்கும் இங்கும் பறந்து, பூக்களில் உள்ள மலரமுதை அருந்தும். தேன் சிட்டை விட சிறிதாக இருக்கிறது. சாம்பல் வண்ண உடல். சற்றே நிறம் மங்கலான அடிப்புறம். இளஞ்சிவப்பு நிற, கீழ் நோக்கி சற்றே வளைந்த கூர்மையான அலகு. மிகச் சிறிய வால். ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை. இந்தியாவில் காணப்படும் மிகச் … Continue reading தூவித்தோழர்கள்-37




